புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொன்னியின் செல்வனுக்காக எடை குறைந்த நடிகர் பிரபு ? : வெளியான புகைப்படம் வைரல்

எடை குறைந்த நிலையில் காணப்படும் நடிகர் பிரபுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:15 am

DIN

எடை குறைந்த நிலையில் காணப்படும் நடிகர் பிரபுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் ஓர்ச்சாவில் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் நடிகர் கார்த்தி, பிரகாஷ் ராஜ், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சிக்கூடத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புகைப்படத்தில் நடிகர் பிரபு உடல் எடை குறைந்து காணப்படுகிறார். பொன்னியின் செல்வன் படத்துக்காக உடல் எடை குறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் புகைப்படம் குறித்து பகிர்ந்துகொண்ட ரஹ்மான், ''இந்தப் புகைப்படம் பொன்னியின் செல்வன் படப்பின்போது எடுக்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை என்னால் பகிர முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள்.'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Story image

'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஆர்,ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.