செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.


இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வந்த 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
'ராக்கி' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தை இயக்குகிறார். ஆக்சன் , த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க : லவ் ஸ்டோரியுடன் சந்திக்க வரும் சாய் பல்லவி!
_.jpeg)
டப்பிங் பணியில் செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட் ' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் செல்வராகவன்.
தற்போது 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் ஆரம்பமாகி இருப்பதால் அதில் செல்வராகவன் பங்கேற்றிருக்கிறார்.
இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வெளியிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...