மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னணி இயக்குநர்களின் புதிய தயாரிப்பு நிறுவனம் 

தமிழின் முன்னணி  இயக்குநர்கள் பலரும் தனியாக தயாரிப்பு நிறுவனம்  தொடங்கி தங்களுடைய படங்களையும்  புதுமுக இயக்குநர்களின் படங்களையும்  தயாரித்து வருகிறார்கள்

News image

முன்னணி இயக்குநர்களின் புதிய தயாரிப்பு நிறுவனம் 

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:16 am

தமிழின் முன்னணி  இயக்குநர்கள் பலரும் தனியாக தயாரிப்பு நிறுவனம்  தொடங்கி தங்களுடைய படங்களையும்  புதுமுக இயக்குநர்களின் படங்களையும்  தயாரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ் ' போன்ற நிறுவனங்கள் பல நல்ல படங்களை தயாரித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , ஷங்கர் ,ஏ.ஆர் முருகதாஸ் , கெளதம் மேனன் , வெற்றிமாறன் , மிஷ்கின் , லிங்குசாமி  , வசந்தபாலன் , லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து  புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள். 

'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின்  தயாரிப்பில் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

மேலும் குறும்படங்கள் , இணையத் தொடர்களையும் இந்த தாயரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.