அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :2 டிசம்பர் 2021, 2:42 pm

DIN

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர் சுப்ரமணிய சிவா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், தங்கதுரை, குணநிதி, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை மதி மாறன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த டிரெய்லரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கிலி முருகன், ''என்னப்பா நீட் நீட்டுனு போட்டு உயிரெடுக்கிறாங்க'' என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் இயக்குநர் கௌதம் மேனன், ''நீட்டை தடுக்க முடியாது. ஆனால் அதை வைத்து காசு பார்க்கலாம்'' என வசனம் பேசுகிறார். இந்த வசனம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.