பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: ரஜினி

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: ரஜினி
Published on
Updated on
1 min read

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், என் பிறந்த நாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும். ஓ. பன்னீர்செல்வம், ஜி.கே வாசன், திருநாவுக்கரசர், டிகே. ரங்கராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வைகோ, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான், தினகரன், சசிகலாவுக்கும் மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், கமலஹாசன், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து, அமிதாப்பச்சன், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், வெங்கடேஷ் ஐயர் மற்றும் பல பிரபலங்களுக்கும் திரையுலகைச் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானங்களும் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com