பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா. ஆனால் அவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் முதலில் திரைக்கு வந்தது. அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகையானார். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி உட்பட அனைவருடன் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெற்றிகளைக் குவித்து வருகிறார். ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க | பாஜக மிரட்டுகிறது'': ஆன்டி இந்தியன் தயாரிப்பாளர் புகாரால் பரபரப்பு
இந்த நிலையில் த்ரிஷா நடித்து வெளியான மௌனம் பேசியதே வெளியாகி 19 வருடங்கள் ஆகிறது. அதாவது த்ரிஷா திரையுலகுக்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை அவர் கேக் வெட்டிக்கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த அவர், ''உனக்கு விடுமுறை தேவைப்படாத ஒரு வேலைக்கு செல் என ஒரு மேதை சொன்னார். நான் இப்பொழுது வரை விடுமுறையில் தான் இருக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கு, உங்களால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


