தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பீஸ்ட்' பட பாடல் அறிமுக விடியோவில் விஜய்யுடன் இணைந்து தோன்றும் சிவகார்த்திகேயன்

பீஸ்ட் பட பாடல் அறிமுக விடியோவில் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2021, 2:29 pm

DIN

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருந்ததாகவும் அந்தப் பாடலை விஜய் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் பாடலை அறிவிக்கும் விதமாக உருவான விடியோவில் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனராம். இந்த விடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.