

பொதுவாகவே புத்தாண்டு என்றாலே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் உருவான சகலகலா வல்லவன் படத்தில் இருந்து இளமை இதோ இதோ என்ற பாடல் தவறாமல் இருக்கும். இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஹேப்பி நியூ இயர் என்று தொடங்கி இளமை இதோ இதோ பாடலை பாடுகிறார். பின்னர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த விடியோவில் இளையராஜா மிகுந்த குதூகலமாக பாடுகிறார்.
இந்த நிலையில் இளையராஜா பாடும் விடியோவை பகிரும் கமல்ஹாசன், ''இளையராஜாவை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன். இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார். அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையத்தளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.