
சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தமிழக அரசு ரூ. 75 லட்சம் நிதியுதவி அளிக்கவுள்ளது.
18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட உள்ளன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 டிசம்பரில் நடைபெற வேண்டிய இந்த விழா இம்மாதம் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்குத் தமிழக அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சாா்பில் நடக்கும் சென்னை சா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த வருடமும் தமிழக அரசு ரூ. 75 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
ரூ. 75 லட்சத்துக்கான காசோலையை இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் இயக்குநருமான திரு.ஏ.தங்கராஜிடம் தமிழக முதல்வா் பழனிசாமி வழங்கியுள்ளார்.
மேலும், செங்கல்பட்டு - பையனூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு அருகில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா படப்பிடிப்புத் தளம் அமைக்க தமிழக அரசின் சார்பில் ரூ. 3.50 கோடிக்கான காசோலையைத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.