ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

'கர்ணன் குரலைக் கேட்பீர்கள்': டப்பிங் முடிந்ததாக தனுஷ் ட்வீட்

​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாக அதன் கதாநாயகன் தனுஷ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2021, 4:32 pm

DIN


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாக அதன் கதாநாயகன் தனுஷ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கர்ணன் குரலைக் கேட்பீர்கள் என்று புகைப்படத்தை இணைத்துள்ளார் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.