ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹலிதா ஷமீம் இயக்கிய ஏலே: விஜய் தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பு!

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி...

News image
Updated On :27 பிப்ரவரி 2021, 9:56 am

DIN

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.  

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் ஓடிடியிலும் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நாள்களுக்குப் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 50 நாள்களுக்குப் பிறகும் தான் ஓடிடிடியில் வெளியாக வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில ஆச்சர்யமான புதிய விதிகளால் படத்தைத்  திரையரங்குக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏலே படம் பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. 

இதையடுத்து ஏலே படம் நாளை (பிப். 28) விஜய் தொலைக்காட்சியில் பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.