தென்னிந்தியக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாதாசாகேப் பால்கே விருது வருடந்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடக் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம் அறிவிக்கப்பட்ட விருதுகளில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷும் சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவும் பெற்றுள்ளார்கள்.
சிறந்த தமிழ்ப் படமாக டூலெட் தேர்வாகியுள்ளது. சிறந்த பன்முகத் திறமை வாய்ந்த நடிகராக அஜித் தேர்வாகியுள்ளார்.
தாதாசாகேப் பால்கே 2020: கோலிவுட்
சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)
சிறந்த படம்: டூலெட்
சிறந்த நடிகை: ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குநர்: ஆர். பார்த்திபன் (ஒத்த செருப்பு)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத்
பன்முகத் திறமை வாய்ந்த நடிகர்: அஜித் குமார்