என் உலகத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டேன்: செல்வராகவன்

தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் புகைப்படப் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன்.
என் உலகத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டேன்: செல்வராகவன்
Updated on
1 min read

தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் புகைப்படப் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கி இன்னும் வெளிவராத நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரு படங்களுக்கும் யுவன் தான் இசை. 

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா.

இப்படத்தின் புகைப்படப் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செல்வராகவனும் தாணுவும் வெளியிட்டுள்ளார்கள்.

ட்விட்டரில் செல்வராகவன் கூறியதாவது: 

என்னுடைய உலகத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டேன். செல்வராகவன் 12-வது படம் என்றார்.

தயாரிப்பாளர் தாணு கூறியதாவது: இந்தியாவின் சிறந்த இயக்குநருடன் முதல்முறையாக இணைவதில் பெருமை கொள்கிறேன். காலத்தால் அழியாத மகத்தான படங்களை அளித்தவர். புகைப்படப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com