ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் நாற்காலி

யோகி, வடசென்னை படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ள இயக்குநர் அமீர், நாற்காலி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 9:38 am

DIN

யோகி, வடசென்னை படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ள இயக்குநர் அமீர், நாற்காலி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கிய வி.இசட்.துரை, நாற்காலி படத்தை இயக்கியுள்ளார். 

நாற்காலி படத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி போன்றோர் நடித்துள்ளார்கள். மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

இப்படத்துக்கு வித்யாசகர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி., கடைசியாக இப்படத்துக்காக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்கிற பாடலைப் பாடியுள்ளார். 

அரசியல் பின்னணியைக் கொண்ட நாற்காலி படம் மார்ச் மாதம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.