மாஸ்டர்: ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்த இயக்குநர் மிஷ்கின்
உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைப் பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்தேன்.


தனது உதவி இயக்குநர்களுடன் இணைந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தைத் திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார் பிரபல இயக்குநர் மிஷ்கின்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இந்நிலையில் தனது உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைத் திரையரங்கில் பார்த்த பிரபல இயக்குநர் மிஷ்கின், ட்விட்டரில் படம் பற்றி தெரிவித்ததாவது:
உதவி இயக்குநர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தைப் பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரம், விசில்களை ரசித்தேன். விஜய் அழகாகவும் ஸ்டைலாகவும் உள்ளார். விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...