கிரிக்கெட் வீரர் நடராஜன் - நடிகர் யோகி பாபு சந்திப்பு (படங்கள்)
பிரபல நடிகர் யோகி பாபுவும் கிரிக்கெட் வீரரும் நடராஜனும் சந்தித்து உரையாடி...


கிரிக்கெட் வீரர் நடராஜனை நடிகர் யோகி பாபு நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமானார் தமிழக வீரரான நடராஜன். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.
இந்நிலையில் பிரபல நடிகர் யோகி பாபுவும் கிரிக்கெட் வீரரும் நடராஜனும் சந்தித்து உரையாடி, நண்பர்களுடன் இணைந்து உணவு அருந்தியுள்ளார்கள். இந்தச் சந்திப்பின் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.







தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...