ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இன்னும் சற்று நேரத்தில் 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

News image
இன்னும் சற்று நேரத்தில் 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Updated On :10 ஜூலை 2021, 11:12 am

DIN

'மாஸ்டர்' படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த பட அறிவிக்குப் பிறகு, அடுத்ததாக எந்த தகவலும் வெளியாகததால் ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டது.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (10/07/2021)  மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் தலைப்பை அறிவிக்கும் விதமாக வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதில் 'ஆரம்பிக்கலாங்லா ?' என கமல் தனது ஸ்டைலில் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.