கமல் நடிக்கும் விக்ரம்: படப்பிடிப்பு தொடங்கியது (படங்கள்)
முதல் நாளன்று கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த காட்சியை லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார்.


கமல் ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அதிலும் வெற்றியைப் பெற்றார்.
அடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடிக்கிறார்கள். விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக கேரளத்தைச் சேர்ந்த கிரிஷ் கங்காதரன் தேர்வாகியுள்ளார்.
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாளன்று கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த காட்சியை லோகேஷ் கனகராஜ் படமாக்கியுள்ளார். ஃபஹத் ஃபாசில் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...