விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2'வை இயக்கப்போவது யார் தெரியுமா ? - ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப்போகும் இயக்குநரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது சுட்டுரையின் வாயிலாக அறிவித்துள்ளார். 
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2'வை இயக்கப்போவது யார் தெரியுமா ? - ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் இயக்குநரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது சுட்டுரையின் வாயிலாக அறிவித்துள்ளார். 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.  தனது தாயின் உயிரைக் காக்க பணக்காரனான மகன் எவ்வாறு பிச்சைக்காரன் ஆகிறான் என்பதே இந்தப் படத்தின் கதையாகும். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மொழிகள் கடந்து அனைவரையும் கண் கலங்கச் செய்தது. 

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் பரவின. அதன் ஒரு பகுதியாக 'பாரம்' படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. 

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 'பிச்சைக்காரன் 2' படத்தின் இயக்குநரை ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பார் என்று தகவல் வெளியானது. அதன்படி இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே இயக்கவிருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்தப் படம் 2022 ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com