பிரபல சின்னத்திரை நடிகையுடன் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம்

பிரபல பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. 
பிரபல சின்னத்திரை நடிகையுடன் பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம்
Updated on
1 min read

பிரபல பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான சினேகன், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் தன்னை பார்க்க வந்திருந்த  தந்தை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் காண்போரைக் கண் கலங்கச் செய்தது. 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். 43 வயதாகும் சினேகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில் சினேகன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை கன்னிகா ரவிக்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில், ''இந்தத் திருமணம் சென்னையில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால், நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும், தனி மனித இடைவெளியோடும், அரசு விதி முறைகளோடு நடைபெருகிறது.

எனவே தளர்வுகளுக்கு பின் விரவைில் உங்களை சந்திக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார். இந்தத் திருமணமானது கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சினேகன் திருமணம் செய்துகொள்ளப்போகும் கன்னிகா ரவி, சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண வீடு' தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  மேலும் 'தேவராட்டம்', 'ராஜவம்சம்' படங்களிலும் முக்கிய வேடங்களில்  நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com