மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நடிகை மீது முன்னாள் அமைச்சா் மணிகண்டனின் மனைவி புகார்

குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்தோடு என் கணவர் மீது பொய்யான புகாரை நடிகை கொடுத்துள்ளார் என்று...

News image
Updated On :1 ஜூன் 2021, 12:40 pm

DIN

எனது குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்தோடு என் கணவர் மீது பொய்யான புகாரை நடிகை கொடுத்துள்ளார் என்று முன்னாள் அமைச்சா் மணிகண்டனின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த ஒரு நடிகை, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘மலேசியாவைச் சோ்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவா் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தாா். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தாா். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதை கலைக்கச் செய்தாா். தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுகிறாா். அவருடன் நான் தனியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரவச் செய்துவிடுவதாக மிரட்டுகிறாா். ஐந்தாண்டாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்

நடிகையின் குற்றச்சாட்டை மணிகண்டன் மறுத்திருந்தாா். புகாா் குறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். புகாா் குறித்து அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து வருகிறது. 

முன்னாள் அமைச்சா் மணிகண்டன், அவரது உதவியாளா் பரணி ஆகியோா் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணின் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்தல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்பட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீது அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

எனது குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்தோடும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் என் கணவர் மீது பொய்யான புகாரை நடிகை கொடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் மனு, சென்னை அடையாறு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.