புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடவுள் முருகனைத் தினமும் வழிபடுகிறேன்: நடிகை ஸ்ருதி ஹாசன்

கடவுள் முருகனைத் தினமும் வழிபடுகிறேன். இதுபோன்ற தருணங்களில்...

News image
Updated On :21 ஜூன் 2021, 7:23 am

DIN

கடவுள் முருகனைத் தினமும் வழிபடுவதாக கமல் ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் உள்ளார். 2009-ல் லக் என்கிற ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். லாபம், சலார் ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஸ்ருதி ஹாசன் எழுதியதாவது:

கடினமான காலகட்டத்தில் தலைநிமிர்ந்து நடக்கவும் பிரகாசமான காலத்தில் தன்னடக்கத்துடனும் இருக்கவும் என் தந்தை என்னை வழிநடத்தியுள்ளார். யாரை வணங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. கடவுள் முருகனைத் தினமும் வழிபடுகிறேன். இதுபோன்ற தருணங்களில் நம் நம்பிக்கையை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.