ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஹாட்ஸ்டாரில் ஜூன் 30 முதல் தமிழ், தெலுங்கில் வெளியாகும் லோகி இணையத்தொடர்: டிரெய்லர்கள் வெளியீடு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 30 முதல் வெளியாகவுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2021, 11:46 am

DIN

சமீபத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வெளியான லோகி இணையத்தொடர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 30 முதல் வெளியாகவுள்ளது.

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைத் தயாரிக்கும் மார்வெல் ஸ்டூடியோஸ், 23 சூப்பர் ஹீரோ படங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. 2008-ல் முதல் படமாக அயர்ன் மேன் படமும் 23-வது படமாக 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் படமும் வெளியாகியுள்ளன. இந்த வருடம் இரு இணையத்தொடர்களைத் தயாரித்த மார்வெல் ஸ்டூடியோஸ், அடுத்ததாக லோகி என்கிற அட்டகாசமான இணையத்தொடரை ஜூன் 9 முதல் வெளியிட்டு வருகிறது. அன்றைய தினம் முதல் எபிசோட் வெளியானது. இதுவரை 3 எபிசோட்கள் வெளியாகியுள்ளன.

லோகி கதாபாத்திரம் இதற்கு முன்பு - தோர், தோர்: தி டார்க் வேர்ல்ட், தோர்: ரக்னரோக் ஆகிய படங்களிலும் நான்கு அவெஞ்சர்ஸ் படங்களில் மூன்றிலும் (தி அவெஞ்சர்ஸ், இனிஃபினிடி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்) இடம்பெற்றுள்ளது. இப்போது லோகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டு லோகி இணையத்தொடர் உருவாகியுள்ளது. காட் ஆஃப் மிஸ்சீஃப் என அழைக்கப்படும் லோகியாக டாம் ஹிட்லிஸ்டன் நடித்துள்ளார். பெண் இயக்குநர் கேட் ஹெர்ரோன், இதன் ஆறு எபிசோட்களையும் இயக்கியுள்ளார்.

சென்னை பற்றி டாம் ஹிட்லிஸ்டன் கூறியதாவது: என் அக்கா அங்கு வசிக்கிறார். சென்னைக்குச் சில முறை நான் சென்றுள்ளேன். சென்னை அருமையான நகரம் என்றார்.

லோகி இணையத்தொடரின் முதல் எபிசோட் - ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் முதலில் வெளியானது. 

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த லோகி இணையத்தொடரின் முதல் எபிசோடைத் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜூன் 30 முதல் காணலாம். இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான லோகி டிரெய்லர்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 30 முதல் ஒவ்வொரு புதன் அன்றும் லோகி இணையத்தொடரின் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான எபிசோட்கள் வெளியாகவுள்ளன.

Story image
YouTube video thumbnail
YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.