அமெரிக்காவில் ரஜினி: வெளியான புதிய புகைப்படங்கள்
அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் ரஜினி. அவருடன் குடும்பத்தினரும் சென்றார்கள்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளார்கள். தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார்.
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் அமெரிக்காவில் ரஜினியுடன் அவருடைய ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...