கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை

நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2021, 8:00 am

DIN

நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. 

பாண்டோம் ஃபிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. மும்பை மற்றும் புணே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா,  விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். எனினும் கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.