தனுஷின் கர்ணன் டீசர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு
கர்ணன் திரைப்படத்தின் டீசர் மார்ச் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


கர்ணன் திரைப்படத்தின் டீசர் மார்ச் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்திருந்தனர். தற்போது டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி படத்தின் டீசர் மார்ச் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்து தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...