காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு கரோனா பாதிப்பு

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.

News image
Updated On :10 மே 2021, 10:34 am

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். ஜூனியர் என்டிஆர், 2001 முதல் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன். நானும் எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். மருத்துவர்களின் அறிவுரைப்படி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். சமீபமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.