விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கவனக்குறைவாக இருந்தேன்: விடியோவில் கரோனா பாதிப்பைத் தெரிவித்த நடிகர் சென்றாயன்

கரோனா நாம் நினைப்பது போல் இல்லை. அபாயகரமானது என்றார்...

News image
படம் - youtube.com/c/VijayTelevision/
Updated On :13 மே 2021, 11:15 am

DIN

பிக் பாஸ் புகழ் சென்றாயனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா, ஆஜித் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சென்றாயனுக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுபற்றி வெளியிட்ட விடியோவில் சென்ராயன் கூறியதாவது:

வாழ்க்கையில் எல்லாவற்றையும் நான் பாசிடிவ்வாக தான் பார்ப்பேன். இப்போது கரோனா பாசிடிவ் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் நான் கவனக்குறைவாக இருந்தேன். இப்போது எனக்கே பாதிப்பு நேர்ந்துவிட்டது. எனவே அனைவரும் கவனமாக இருங்கள். 

இப்போது என் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். என் மனைவியும் குழந்தையும் பக்கத்து அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவ்வப்போது மனைவி சாப்பாடு கொண்டு வந்து தருகிறார். கரோனா நாம் நினைப்பது போல் இல்லை. அபாயகரமானது என்றார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.