கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கரோனா பாதிப்பு

கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 
படம் - instagram.com/samyuktha_hegde/
படம் - instagram.com/samyuktha_hegde/
Updated on
1 min read

கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

2016-ல் கிர்க் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே. வாட்ச்மேன், கோமாளி, பப்பி ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் தற்போது சம்யுக்தாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி வருகிறேன். என்னுடைய பெற்றோர் குணமாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com