ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'ஜெய் பீம்' படத்தால் விக்ரம் பிரபு படத்துக்கு உருவாகும் எதிர்பார்ப்பு - ஏன் தெரியுமா ?

ஜெய் பீம் படத்தினால் விக்ரம் பிரபு படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2021, 6:10 am

DIN


சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இன்று (நவம்பர் 2) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையில் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

Story image

இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருப்பவர் தமிழ். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அசுரன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

Story image

அடிப்படையில் இயக்குநரான தமிழ், விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். காவலர் பயிற்சியின் போது நடக்கும் கொடுமைகளை இந்தப் படம் பேசும் என கூறப்படுகிறது.

Story image

இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஜெய் பீம் படத்தில் தமிழின் வேடம் வரவேற்பைப் பெற்று வருவதால் அவர் இயக்கிய டானாக்காரன் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.