வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

'மாநாடு' படத்துக்கு சிக்கல்: ''உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இது முதல்முறை'': தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் வருத்தம்

சிம்புவின் மாநாடு தொடர்பாக சுரேஷ் காமாட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :22 நவம்பர் 2021, 6:32 am

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் வருகிற 25 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. இதில் திரையரங்குகளும் அடங்கும். இதனையடுத்து சிம்புவின் மாநாடு படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலைப் பகிர்ந்து, ''உலகிலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?  முன்பு போலவே திரையரங்கிற்கு மக்களை அனுமதிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.