மீண்டும் இணையும் இயக்குநர் அமீர் - யுவன் வெற்றிக் கூட்டணி !
புதிய படத்தில் இயக்குநர் அமீர் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ' ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதி - பகவன் 'போன்ற படங்களை இயக்கினார். இதில் ஆதி-பகவன் தவிர்த்து மற்ற 3 படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவரது படங்கள் காலம் கடந்தும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக 4 படங்களிலும் யுவனின் இசை படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது. இதனையடுத்து இருவரும் மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறிதத் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...