ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அமலா பால் பகிர்ந்த திருமண விடியோ : டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகை அமலா பால் தனது தம்பியின் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட விடியோவைப் பகிர, அதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

News image
Updated On :6 அக்டோபர் 2021, 7:02 am

DIN

நடிகை அமலா பால் தனது தம்பியின் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட விடியோவைப் பகிர, அதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

'மைனா' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால். அந்தப் படத்தில் கிடைத்த புகழின் காரணமாக தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தார். தெய்வத்திருமகள் படத்தில் நடிக்கும்போது இயக்குநர் விஜய்யுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. 

தொடர்ந்து இருவரும் நடிகர் விஜய்யின் 'தலைவா' படத்தில் இணைந்து பணிபுரிந்தனர். அந்தப் படத்தில் பணிபுரியும் போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

இருவரது திருமண வாழ்வு 3 ஆண்டுகளே நீடித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துபெற்றனர். வழக்கம்போல விவாகரத்துக்கு அமலா பால் தான் காரணம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து திரைப்படங்களில் அமலா பால் நடித்துவந்தார். 

Story image

குறிப்பாக ஆடை படத்தில் நிர்வாணமாக, துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்துக்காக விமரிசகர்களின் பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில் பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை அமலா பால் ரகசிய திருமணம் பண்ணிக்கொண்டதாக கடந்த வருடம் தகவல் பரவியது. திருமண கோலத்தில் இருவருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. 

Story image

இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளார். தன்னுடைய தம்பியின் திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட விடியோவை பகிர்ந்து தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.