கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம்': என்ன சொல்கிறார் முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர்: ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவை பகிரும் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் துவங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 அக்டோபர் 2021, 5:49 am

DIN

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவை பகிரும் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் துவங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்று  வெளியான புதிய ப்ரமோவில் பேசும் இமான் அண்ணாச்சி, ஒரு நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று சொல்கிறார். உடனே போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகிறது. 

அப்போது நிரூப் ஏதோ சொல்ல, அவரை அருகில் இருக்கும் சிபி கண்டிக்கிறார். உடனே கோபமடையும் நிரூப், இமான் அண்ணாச்சியிடம், ''உங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது'' என்று கேட்க, 'சிரிக்கலாமே' என்கிறார் இமான் அண்ணாச்சி. உடனே 'எனக்கு சரியாகப்படவில்லை' என சொல்லும் சிபி, மற்றவர்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் ? என்று கூறி வேகமாக அங்கிருந்து எழுந்து செல்கிறார். நிரூப்பை அபிஷேக் ராஜா சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். 

Story image

அப்போது இந்த வீட்டில் சண்டை துவங்கவிருப்பதாக நமீதா மாரிமுத்து கூறுகிறார்.  இந்த ப்ரமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும், பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம் என்று கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக அமைதியாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது போட்டியாளர்களுக்குள் எழுந்த சலசலப்பால் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.