வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறு நடிகர் நடிக்கவிருப்பதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதன்முதலாக வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிவகார்த்திகேயனின் திரையலக வாழ்க்கையில் மிக முக்கிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
இந்தப் படத்தையடுத்து பொன்ராமும், சிவகார்த்திகேயனும் இணைந்து ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களில் பணியாற்றினர். இதில் சீம ராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது சசிக்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் எம்ஜிஆர் மகன் என்ற படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
.jpg)
இதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் பொன்ராம் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் முதிர்ச்சியான நடிகராக மாறிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



