அரங்கம் முழுக்க தெறிக்க ! ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' டீசர் எப்போ தெரியுமா ? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

அண்ணாத்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கம் முழுக்க தெறிக்க ! ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' டீசர் எப்போ தெரியுமா ? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

அண்ணாத்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் தீபவாளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார். டி. இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் இருந்து அண்ணாத்த அண்ணாத்த, சாரக் காற்றே ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்தப் படத்தின் டீசர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com