நயன்தாராவுக்கு ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் புகழாராம்!

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாராம் தெரிவித்துள்ளது.
நயன்தாராவுக்கு ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் புகழாராம்!

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் நயன்தாராவின் புகைப்படம் பகிர்ந்து புகழாராம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. தமிழில் பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் பிரபல கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார். தனி கதாநாயகியாக அறம், மாயா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனிப்பட்ட வியாபராச் சந்தையை உருவாக்கியிருக்கிறார்.   

தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹிந்திப் பட உலகிலும் கால்பதித்து விட்டார். ஹிந்தியிலும் முன்னணி நடிகையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நிலையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் அட்டையில் நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்வதாக புகழாரம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com