மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் தொடரின் இறுதி பாகத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது.
மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு
மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடு

உலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் தொடரின் இறுதி பாகத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது. 

மணி ஹைஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின.

குறிப்பாக கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹைஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், 5-ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் பாகத்தின் முதல் அத்தியாயம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதியும் வெளியாக உள்ளநிலையில் புதன்கிழமை அதன் டீசர் இணையத்தில் வெளியானது.

இத்துடன் மணி ஹைஸ்ட் தொடர் நிறைவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com