மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திலிருந்து கார்த்திக் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய உச்சந்தல ரேகையில என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தையும் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக டி.முருகானந்தம் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










