ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

'பொன்னியின் செல்வன்' : ஒளிப்பதிவாளரான 'வந்தியத்தேவன்' கார்த்தி: படப்பிடிப்புத் தள புகைப்படம் வைரல்

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனை நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 5:26 am

DIN

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்புத் தளத்தில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனை நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது, மத்தியப் பிரதேசம் மாநிலம் மகேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் புகைப்படம் பகிர்ந்து, ''வானின் மாயாஜாலம். ஒரு மாற்றத்துக்காக நான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை படமெடுத்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பு தற்போது மகேஸ்வரில் நடைபெற்று வருவதை கார்த்தி உறுதி செய்துள்ளார். 

மேலும் ராஜ ராஜ சோழனாக நடிக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதை வருத்தத்துடன் அறிவிக்க, நடிகர் கார்த்தி அவருக்கு வந்தியத்தேவனாக, ''அரசே! நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் மீதமிருக்கின்றன'' என ட்விட்டரில் ஆறுதல் கூறினார். 

'பொன்னியின் செல்வன்' படத்தின் போர் காட்சிகள் படமாக்கப்பட்ட போது குதிரை ஒன்று இறந்துள்ளது. இதனையடுத்து பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில், இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.