சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலியுடனும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை...

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 8:42 am

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. 

ட்விட்டர், இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளங்களில் இணைந்துள்ள அதிதி ஷங்கர், புதிதாக இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் பட பூஜையில் கலந்துகொண்டார்கள். 

நேற்றைய நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலியுடனும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் அதிதி ஷங்கர். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.