காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் 3வது முறையாக இணையும் விஜய் சேதுபதி

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :14 செப்டம்பர் 2021, 12:24 pm

DIN

'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரே வாரத்தில் விஜய் சேதுபதியின் 'லாபம்', 'துக்ளக் தர்பார்' ஆகிய படங்கள் வெளியாகின. வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களின் இயக்குநர் மணிகண்டனுடன் விஜய் சேதுபதி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் முழுக்க, முழுக்க கிராமத்துக் கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடைசி விவசாயி படத்தின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.