அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஓடிடியில் வெளியாகும் பிக்பாஸ் கவின் படம் : எப்போ தெரியுமா ?

பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:06 am

DIN

பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்களில் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர் கவின். இதனையடுத்து அவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சாண்டியுடன் நட்பு, சாக்ஷி அகர்வால் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் பிரச்னை என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

இதனையடுத்து அவர் 'பிகில்' அம்ரிதாவுடன் இணைந்து 'லிஃப்ட்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய 'என்ன மயிலு' பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த நிலையில் 'லிஃப்ட்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'லிஃப்ட்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.