ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விடியோவை வெளியிட்ட சிவகார்த்திகேயனின் டாக்டர் படக்குழு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து, சோல் ஆஃப் டாக்டர் என்ற இசை விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 3:19 pm

DIN

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து, சோல் ஆஃப் டாக்டர் என்ற இசை விடியோ வெளியாகி, வரவேற்பைப் பெற்று வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக முன்னோட்டத்தில் இடம் பெற்ற இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இசையை வெளியிடுமாறு இசையமைப்பாளர் அனிருத்திடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க அந்த இசை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இசையை அதற்கான காட்சிகளையும் வைத்துப் பார்க்கும் போது, படத்தின் இறுதிக் காட்சியில் இந்த இசை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் படத்தை சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, வினய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.