விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரபல சின்னத்திரை நடிகைக்கு அறுவைச் சிகிச்சை

பிரபல சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தனக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 11:24 am

பிரபல சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தனக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் நடித்த பகல் நிலவு சின்னத்திரை தொடர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். மேலும் இவர் நடித்த குறும்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 

6 மெழுகுவர்த்திகள் மற்றும் கொடிவீரன் போன்ற படங்களில் பாடியுள்ள அவர், கபாலி, மாஸ்டர், வணக்கம் டா மாப்ளே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Story image

அதில், எனக்கு வருகிற சனிக்கிழமை இரவு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. சரியாவதற்கு சில நாட்கள் ஆகும். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். நன்றி என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.