
'மாஸ்டர்' பட ஹிந்தி ரீமேக்கில் இருந்து சல்மான் கான் விலகிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'மாஸ்டர்'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | பிரபல தமிழ் திரைப்பட நடிகை சித்ரா காலமானார்
இந்த நிலையில் மாஸ்டர் பட ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சல்மான் கான், மாஸ்டர் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று விலகிக்கொண்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு புறம் அவர் நடித்து சமீபத்தில் வெளியான சில படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதால் அவர் தற்போது ரீமேக் வேண்டாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம்: படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான பிரத்யேக படங்கள்
மேலும் கடைசியாக பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வெளியான 'ராதே' திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை. இதன் காரணமாக அவர் தற்சமயம் ரீமேக் வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம்.