
கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரத்யேகமாக வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
புகைப்படங்களில்: டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட்
மேலும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஷிவானி, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, 'சர்கார்' பட ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பணிபுரியும் ஒருவர், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு முகநூலில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.