
கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக்பாஸ் வருண், ராஹேய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்துக்கு பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | 14 மணி நேரத்தில் பீஸ்ட் பட டப்பிங் பணிகளை முடித்த விஜய் - காரணம் என்ன?
இந்தப் படத்தின் டிரெய்லர் கௌதம் மேனனின் முந்தைய படங்களான அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. தற்போது வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.