
பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், வெறும் 14 மணி நேரத்தில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளாராம். இதற்காக 4 நாட்கள் அவர் எடுத்துக்கொண்டுள்ளார். காரணம் இந்தப் படத்தில் விஜய்க்கு வசனங்கள் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்க, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.