
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 4) வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அண்ணாத்த படத்துக்கு திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த நிலையில் உலக அளவில் முதல் நாளில் இந்தப் படம் ரூ.46.8 கோடி வசூலித்துள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அளவில் இந்தப் படம் முதல் நாளில் ரூ.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இந்தப் படத்துக்கு கிடைத்த விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்பதை இந்தத் தகவல்கள் சொல்கின்றன.
#Annaatthe day 1 worldwide gross 46.8 crores.
— LetsOTT GLOBAL (@LetsOTT) November 5, 2021
இதையும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம்: சிறப்பு போஸ்டர் மூலம் கிளிம்ப்ஸ் விடியோ குறித்து அறிவிப்பு
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையா கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பிரகாஷ் ராஜ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.